41 வருட தாமதத்திற்குப் பிறகு சர்தார்படேலுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்தக் கால காங்கிரஸ் அரசாங்கத்தால் சர்தார் வல்லபாய் படேலுக்குப் போதுமான மரியாதை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். 41 வருட தாமதத்திற்குப் பிறகு சர்தார் படேலுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அமித்ஷா, நாட்டை ஒருங்கிணைத்த படேலுக்கு நாட்டில் எங்கும் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்படாமல் இருந்ததாக தெரிவித்தார். நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போதுதான், ஒற்றுமைச் சிலையை அவர் கருத்தியல் செய்து, சர்தார் படேலின் நினைவாக ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னத்தைக் கட்டியதாக அமித்ஷா குறிப்பிட்டார்.

Night
Day