எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் சுசூகி நிறுவனத்தின் இ-விதாரா மின்சார வாகனத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வரும் நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சார வாகனமான இ-விதாரா காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தமது குஜராத் மாநில சுற்றுப் பயணத்தின் 2ம் நாளான இன்று, ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ஆலையில் இருந்து இ-விதாரா மின்சார வாகனத்தை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த கார் ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற மேம்பட்ட சந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இது, இந்தியாவை சுசுகியின் மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும்.
இதைத் தொடர்ந்து, டிடிஎஸ் லித்தியம்-அயன் பேட்டரி ஆலையில் உள்ளூர் கலப்பின பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ஆலை தோஷிபா, டென்சோ மற்றும் சுசுகி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.