ரூ.5 கோடி முறைகேடு - கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

முறைகேடு புகாரில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடுகள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகத்தில் செயல்படும் கால்நடை சுகாதார கல்வி இயக்கக்கத்தில்  சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்த நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் இந்த முறைகேட்டில் பலர்  ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு வரை கால்நடை சுகாதார கல்வி இயக்குனராக இருந்து தற்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல்வராக உள்ள சௌந்தர்ராஜன் உள்ளிட்ட இருவரை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.  

அதன்பேரில் சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரி உட்பட ஐந்து அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகள் குறித்து விசாரித்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கவும் 3 பேர் கொண்ட விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Night
Day