2024 ஐ.பி.எல். போட்டிகளில் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரிட்டனுக்கு செல்ல உள்ளதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் முகமது ஷமி, உலக கோப்பை ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். ஆனால் உலக கோப்பை ஒருநாள் போட்டியிலேயே முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தற்போது கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக முகமது ஷமி பிரிட்டன் செல்வதாகவும், இதனால் 2024 ஆம் ஆண்டின் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

Night
Day