முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் குளறுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பப் போட்டி தொடங்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு திடலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிலம்ப போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் வருகை தந்தனர். போட்டி தொடங்கும் நேரத்தில் திடீரென மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், சிலம்பப் போட்டியின் விதிகள் குறித்து தெரியாதவரை நடுவராக நியமித்தற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிலம்ப மாணவர்களிடம் போட்டி ஏற்பாட்டாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு போட்டி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Night
Day