இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பயங்கரவாதிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநிலத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாகிஸ்தானின் ராவல்பிண்டி, உமார்கோட், பஹாவல்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயங்கரவாதிகள் நுழைந்ததாக உளவுத்தறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் பீகார் காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். பீகாரில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாகன பேரணி நடத்தி வரும் நிலையில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 1ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை நிறைவடையவுள்ளது. இந்தநிலையில், வாகன பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது.

Night
Day