எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காராணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெலிச்சரனா பகுதியில் 35க்கும் மேற்பட்ட வீடுகள், 6 கடைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.