தேசிய அளவிலான கை கிரிக்கெட் போட்டி - தமிழக அணி முதலிடம்

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு அடுத்த மேலை கோட்டையூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி முதல் பரிசை வென்றது.

தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஜாயிண்ட் ஹேண்ட்ஸ் சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு அணிக்கு 30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று 2 மற்றும் 3ம் இடங்களைப் பிடித்த கர்நாடகா மற்றும் ஒடிசா மாநில அணிக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜாயிண்ட் ஹேண்ட்ஸ் சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் தலைவர் குமரேசன் மற்றும் நிறுவன தலைவர் டாக்டர் பி. ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

varient
Night
Day