சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

சென்னை பல்லவன் சாலை அருகே உள்ள எம்.டிசி தலைமையகத்தின் முன்பு, சிஐடியு மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் போக்குவரத்து கழகத்தில் பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதில்,  15வது ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற 3ஆயிரத்து 500 தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணி பலன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் முன் வைத்து சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என எச்சரித்ததைத் தொடர்ந்து, மீண்டும் அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற  ஊழியர்கள் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

விளம்பர திமுகஆட்சியில் தொடர்ச்சியாக போக்குவரத்து ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதாக  சி ஐ டி யு போக்குவரத்து ஊழியர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளனர்.

Night
Day