திருப்பூரில் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், வெள்ளியம்பாளையம் அருகே கைவிடப்பட்ட பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீஸார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் நகராட்சி ஊழியர்கள் கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் மக்களின் எதிர்ப்பை மீறி பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டது. இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Night
Day