தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார்மயமாக்குவதை ரத்து செய்யவும், ஒருமாத சம்பளத்தை போனசாக வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போலீசாரின் அராஜகத்தை கண்டித்தும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் போராட்டத்தை கைவிடுமாறு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Night
Day