டி20 உலகக்கோப்பை - தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் விராட் கோலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களம் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து, கடந்த வாரம் ரோஹித் சர்மா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவதால், அவரே டி20 உலகக்கோப்பை தொடரிலும் தொடக்க வீரராக களமிறக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

Night
Day