இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 52 வருட உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இறுதி போட்டி வரை சென்றுள்ள நிலையில் தற்போது முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது நம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம் கோடிக்கணக்கான இளம் வீராங்கனைகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். தங்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day