பீகார் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத்  தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. கடைசி நாள் பிரச்சாத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டதால் தேர்தல் களம் அனல் பறந்தது. 

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 6 மற்றும் 11ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி உள்ளிட்ட 5 கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

பிரச்சாரம் தொடங்கியதில் இருந்தே தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரபரப்புரை மேற்கொண்டனர். 

இந்நிலையில், 121 தொகுதிகளுக்கு வரும் 6ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது. கடைசி நாள் பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டதால் தேர்தல் களம் அனல் பறந்தது. 

Night
Day