பீகாரில் இறுதிகட்ட பிரசாரத்தில் தலைவர்கள்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்வதால் இறுதிகட்ட பரப்புரையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், பிரச்சாரம் ஆரம்பித்த நாளில் இருந்து இரு கூட்டணிகளுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரவர் கூட்டணிகளுக்கு தீவிர பரபரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.

இதனிடையே, வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இறுதிகட்ட  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், பிரதமர் மோடி பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் தொண்டர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

Night
Day