தெரு நாய்கள் விவகாரம்- பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய ஆணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

தெரு நாய் தொல்லை விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பிரதேச அரசின் தலைமை செயலாளரை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகி, தாமதமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். 

இதையடுத்து நாய்கள் கடிப்பதை தடுக்க மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களை ஆய்வு செய்த பின்னர் வழக்கில் கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதுவரை உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் ஆஜராகி விளக்கங்களை தாக்கல் செய்துள்ளதால், அடுத்த விசாரணையில் தலைமை செயலாளர்கள் ஆஜராக வேண்டியதில்லை என்று கூறிய நீதிபதிகள், தெரு நாய்க்கடி விவகாரத்தில் கூடுதல் நெறிமுறைகளை உத்தரவாக பிறப்பிப்பதற்காக வழக்கை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறினர்.

varient
Night
Day