உள்ளாடைக்குள் மறைத்து 2.5 கிலோ தங்கம் கடத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-


கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ 24 கேரட் தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரையும் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் 5 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் கடத்தல் குருவிகள் என்றும் இதில் தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் முதன்முறையாக கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day