எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் - எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் என்று  மத்திய இணையமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.கே.நகர்‌ தேர்தல் போது தி‌.மு.க.வே போலி வாக்காளர்கள் உள்ளனர் என‌ தெரிவித்து இருந்ததாகவும்  தற்போது தி.மு.க. போலி வேஷம்‌ போட்டுக் கொண்டு நாடகமாடுகிறது என்று சாடினார். நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் நெல் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை திசை திருப்ப முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.குறித்து பேசுவதாக குற்றம் சாட்டினார். திருமாவளவன் எஸ்.ஐ.ஆர். மறைமுக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது என கூறியது முதல்வரின் வேஷத்திற்கு துணை போவது என்றார்.

Night
Day