உலகக் கோப்பை வென்று அசத்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவுக்கு என்னவொரு அற்புதமான தருணம் என்றும் தமது நீலப் படைப் பெண்கள் துணிச்சல், ஆற்றல் ஆகியவற்றை மறுவரையறை செய்து, வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் தமது மூவர்ணக் கொடியை உலகம் முழுவதும் ஏந்திச் சென்றிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்ட அவர், மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் வரலாறு படைக்கப்பட்டுவிட்டது எனவும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.  

Night
Day