தன்னை தோற்கடித்து ராஜா காயினை தூக்கி வீசிய அமெரிக்க வீரரை Clutch செஸ் போட்டியில் வீழ்த்திய குகேஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுராவை உலக சாம்பியன் குகேஷ் வீழ்த்தினார்.

செயிண்ட் லூயிஸ் பகுதியில் நடைபெற்ற போட்டியில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், இரண்டாவது சுற்றிலேயே ஹிகாருவை வீழ்த்தினார். கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடந்த செக்மேட் போட்டியில் குகேஷை வீழ்த்திய நகமுரா, ராஜாவை தூக்கி எறிந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்தநிலையில், தற்போது ஹிகாருவை வீழ்த்திய பிறகு குகேஷ் நடந்து கொண்ட விதம் நாகரீகமான முறையில் ஹிகாருவுக்கு பதிலடி தரும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Night
Day