இந்தூரில் ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக 2 நாட்களுக்கு முன்பு இங்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் 2 வீராங்கனைகள், தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றனர். அப்போது பைக்கில் பின்தொடர்ந்த ஒருவர் வீராங்கனைகளை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பிச் சென்றார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அகீல் என்ற நபரை கைது செய்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Night
Day