பாமக செயல் தலைவராக மகள் ஸ்ரீகாந்தி நியமனம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக செயல்தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை நியமித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரும் அவருடைய மகனுமான டாக்டர் அன்புமணிக்கும் இடையேயான கருத்து மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க அன்புமணிக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்தும் அவர் பதிலளிக்காததால், அவரை கட்சியின் செயல்தலைவர் பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் அன்புமணி தரப்பு இதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், தர்மபுரியில் ராமதாஸ் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை நியமித்து  அறிவிப்பு வெளியிட்டார். செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தி, தன்னையும் பார்த்துக் கொள்வார், பாட்டாளி மக்கள் கட்சியையும் பார்த்துக் கொள்வார், உங்களுக்காக நாளும் உழைப்பார் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். 

Night
Day