விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக திமுக அரசு வெற்று விளம்பரம் செய்கிறது - பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் பாமக தலைவைர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்டா மாவட்டங்களில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், விளைநிலங்களில் நீர் தேங்காதவாறு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், விவசாயிகளிடம் இருந்து 50 நாட்களில் வெறும் 40 சதவீதம் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது முழுக்க முழுக்க திமுக அரசின் தோல்வி என்றும் அன்புமணி சாடியுள்ளார்.

Night
Day