மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு நண்பர்கள் சென்ற கார் மரத்தில் மோதியதில் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ், திருச்சியை சேர்ந்த சபரி மூவரும் கோவை பேரூரை அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று ஹரீஷின் பிறந்த நாளை முன்னிட்டு இவர்கள் 3 பேருடன், கோவை தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகத்தின் 3ம் ஆண்டு மாணவர்களான தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரும் வாட்டர் வாஷுக்காக வந்திருந்த காரை எடுத்து சென்றுள்ளனர். 

அதிவேகமாக சென்ற கார், பேரூர் பச்சாபாளையம் இடையே செட்டிபாளையம் பிரிவை கடந்த நிலையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஹரீஷ், பிரகாஷ், அகத்தியன் சம்பவ இடத்திலேயேயும், படுகாயமடைந்த சபரி மற்றும் பிரபாகரன் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Night
Day