விஷம் கலந்த மக்காச்சோளம் சாப்பிட்ட 50 மயில்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விஷம் கலந்த மக்காச்சோளத்தை சாப்பிட்டு 50 மயில்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குருவிகுளம் கிராமத்தில் பாபு என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை ஜான்சன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். பயிர்களை தோட்டத்தில் எலி, அணில் போன்றவை சேதப்படுத்தி வருவதை தடுக்க, மக்காச்சோளத்தில் விஷ மருந்தை அவர் கலந்து வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இறைதேடி அங்கு வந்த மயில்கள் மக்காசோளத்தை சாப்பிட்டுள்ளன. அப்படி சாப்பிட்டதில் 50 மயில்கள் அங்கேயே உயிரிழந்துள்ளன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் 50 மயில்களையும் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மயில்கள் இறந்தது தொடர்பாக விவசாய நிலையத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஜான்சன் என்பவரிடம் வனத்துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day