ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளம் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியது. இந்நிலையில் இத்தகையை சிறப்பு வாய்ந்த அம்பாலா விமானப் படைத் தளத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை பார்வையிட்டார்.  அப்போது விமானப் படை வீரர்கள் குடியரசுத் தலைவருக்கு அணி வகுப்பு மரியாதையை அளித்தனர். இதனைத் தொடர்ந்து விமானப் படை சீருடை அணிந்து கொண்டு ரஃபேல் போர் விமானத்தில் திரௌபதி முர்மு பறந்தார்.  இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

எனினும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போர் விமானத்தில் பறப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் திஸ்பூர் விமானப் படைத் தளத்தில் சுகோய்-30 போர் விமானத்தில் பறந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோருக்கு அடுத்து 3ஆவதாக சுகோய் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

Night
Day