காவிரி ஆற்றில் குதித்து போராட விவசாயிகள் முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள  நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத விளம்பர திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள்  காவிரி ஆற்றில் குதித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சரியாக கையாளாததால் பல லட்சகணக்கான நெல்மூட்டைகள் அரவை ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கும் அனுப்பாமல் தேங்கியது. இந்நிலையில், திருச்சியில், நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக்கோரியும், விளம்பர திமுக அரசை கண்டித்து விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காவிரி ஆற்றில் குதித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில், காவிரி - அய்யாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.  இதனையடுத்து,  சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Night
Day