பதக்கம் வென்ற கபடி வீரர், வீராங்கனைக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டிக்கான 2025 தொடரின் கபடி போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் இந்திய அணிகள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளதற்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டிக்கான 2025 தொடரின் கபடி போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் இந்திய அணிகள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தவர்களுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக இடம் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவிற்கும், இந்திய ஆடவர் கபடி அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மன்னார்குடியை அடுத்த வடுவூர் கிராமத்தை சேர்ந்த இளம் வீரர் அபினேஷ் மோகன்தாஸுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த வீரர் அபினேஷ் மோகன்தாஸும், வீராங்கனை கார்த்திகாவும் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day