குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மழையில் மூழ்கி அழுகிய இளம் சம்பா பயிர்களை கையில் ஏந்தியவாறு ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு செய்தனர். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Night
Day