உணவருந்திய 400 மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம் - தனியார் பொறியியல் கல்லூரியில் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள  தனியார் பொறியியல் கல்லூரியில் உணவருந்திய 400க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள்  கல்லூரியின் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், இங்கு உணவருந்திய 400க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் 4 பேர் கல்லூரியில் உள்ள கிளினிக்கில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் குடிப்பதற்காக பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்கள் நிறைந்ததாகவும் இருந்ததால் குடிநீர் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


Night
Day