சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 4 பேர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதை மிகவும் பரபரப்பான ரயில் பாதையாகும். பிலாஸ்பூர் அருகே சென்ற பயணிகள் ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள், சரக்கு ரயிலின் மீது ஏறி நின்றது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் நிர்வாகம், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். 

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

varient
Night
Day