ஜெய்ஷா வார்னிங்... ஓரம் கட்டப்பட்ட வீரர்கள்..! பிசிசிஐ காட்டம் ஏன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ரஞ்சி போட்டிகளில் பங்கேற்காத ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்... சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாட ஆர்வம் கொண்ட இருவருக்கும் நேர்ந்த கதி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்திய அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்களாக திகழ்பவர்கள் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இசான் கிஷன் ...

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருவரும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர்.

இருவரில் இஷான் கிஷானுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்து...

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உலக கோப்பை ஒரு நாள் தொடரில் ஐநூறு ரன்களுக்கு மேல் குவித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்...

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி.20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷணுக்கு டி 20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை...

திறமையுள்ள தன்னை ஒப்புக்கு சப்பாணியாக அணியில் வைத்திருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான இஷான் கிஷண், உடல் சோர்வாக இருப்பதாக கூறி தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகினார்...

ஆனால் துபாயில் நண்பர்களுடன் இஷான் கிஷண், ஜாலியாக இருந்த காட்சிகள் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தை அதிர்ச்சிய வைத்தது.

இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி-20தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இசான் கிஷணுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கவில்லை...

ஸ்ரேயாஸ் ஐயரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் பங்கேற்ற நிலையில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்...

இந்நிலையில் ரஞ்சி கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இஷான் கிஷண் முன்வராத நிலையில், காயத்தை காரணம் காட்டி ஸ்ரேயாஸ் ஐயரும் பங்கேற்கவில்லை...

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்தது... இதனால் அவர் மீதும் பிசிசிஐ நிர்வாகம் ஆத்திரமடைந்தது...

இருவரும் ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா எச்சரித்த போதும், அவரவர் மாநிலஙளுக்கான போட்டிகளில் விளையாடாமல் அலட்சியமாகவே இருந்தனர்....

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை பிசிசிஐ ஆண்டு ஒப்பந்த சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது....

ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்காத இருவரின் பெயர்கள், 2024ஆம் ஆண்டுக்கான வீரர்கள் பட்டியலில் பரிசீலக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்தது...

சர்வதேச, ஐபிஎல். போட்டிகளில் மட்டும் ஆர்வத்துடன் பங்கேற்க நினைப்பதும், ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டாததும், கிரிக்கெட் வீரனுக்கு அழகல்ல என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்...

Night
Day