சேலம்: தேசிய அளவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சாஃப்ட் பால் போட்டிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய அளவிலான சாஃப்ட் பால் போட்டி சேலத்தில் உள்ள புனித ஜான் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.  சென்னை சாஃப்ட் பால் அசோசியேஷன் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில்  நாடு முழுவதும் இருந்து நான்கு மண்டலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சவுத் ஜோன் அணியும்,  இரண்டாம்  இடத்தை நார்த் ஜோன், மூன்றாவது பரிசை வெஸ்ட் ஜோன் அணிகளும் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை சவுத் ஜோன், இரண்டாம் இடத்தை வெஸ்ட் ஜோன், மூன்றாவது இடத்தை நார்த் ஜோன் அணிகளும் பெற்றனர். அந்த அணிகள் வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ளதாக  சாப்பிட்டு பால் அசோசியேஷன் சேர்மன் டாக்டர் பிரவீன் அனோக்கர் தெரிவித்தார்.

Night
Day