தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதி நாளை மூடப்படுவதுடன் மற்ற சுற்றுலா இடங்கள் நண்பகலுக்கு மேல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. நூறு சதவீத வாக்குப்பதிவை செலுத்த வேண்டி தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா இடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் சுற்றுலா பகுதி நாளை முழுவதுமாக மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் ஃபாரஸ்ட், குணா குகைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நண்பகல் 12 மணிக்கு மேல் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...