ஐபிஎல் - சிஎஸ்கே போட்டி டிக்கெட் நாளை விற்பனை - ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. வரும் 22ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்கள் PAYTM மற்றும் www.insider.in என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் ஒருவருக்கு 2 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day