தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், காலை முதலே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

தொடர் மழை காரணமாக, சென்னை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அதன் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Night
Day