மகளிர் பிரீமியர் லீக் இன்று இறுதிப்போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2வது சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளே ஆஃப் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும், மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அந்த அணி முதன்முறையாக கோப்பையை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day