ஐபிஎல் தொடர் : ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

18வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.  எஞ்சிய ஒரு இடத்துக்கு டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று இரு அணிகளுக்கு நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11வது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

Night
Day