எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் மறைந்த மூத்த தலைவர் மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மூப்பனாரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜி.கே. மூப்பனாரை பிரதமராக்கும் வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் அதனை சிலர் செய்யவிடாமல் தடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.