புதுக்கோட்டை உழவர் சந்தையில் மழைநீர் - வியாபாரிகள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உழவர் சந்தையில் அரை அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல், தங்களின் தேவைகளுக்காக உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். உழவர் சந்தையில் உள்ள வடிகால் வசதியில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day