கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் இருவேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் உட்பட 3 பேர் பரிதாபாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆண்டார்முள்ளிபள்ளம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. காமராஜர் தெருவை சேர்ந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் ஓட்டு வீட்டில் இருந்தபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் இடுப்பாடுக்குள் சிக்கினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுக்குள் சிக்கி இருந்த இருவரையும் இறந்த நிலையில் மீட்டனர். புதுச்சத்திரம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

Night
Day