எஸ்ஆர்எம் ஹோட்டல் வளாகத்தில் போலீசார் குவிப்பு - பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த எஸ்ஆர்எம் ஹோட்டலை சீல்வைத்து கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஜாமலை பகுதியில் செயல்பட்டு வந்த எஸ்ஆர்எம் ஹோட்டலின் 30 ஆண்டு குத்தகை காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து 20 ஆண்டுகள் நீடிக்க கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் திமுக அமைச்சர் கே.என் நேருவின் தலையீட்டால் சுற்றுலா வளர்ச்சி கழகம் குத்தகையை நீட்டிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி எஸ்ஆர்எம் ஹோட்டலை சீல்வைத்து கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் எஸ்ஆர்எம் ஹோட்டல் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Night
Day