இந்தியா
சபரிமலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் இன்று சாமி தரிசனம் செய்தார்...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் இன்று சாமி தரிசனம் செய்தார். இதற்காக டெல்லியில் இருந்து விமான படை சிறப்பு விமானம் மூலம் அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிடடோர் வரவேற்றனர். ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சன்னிதானத்தில் அய்யப்பனை தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் இன்று சாமி தரிசனம் செய்தார்...
திருச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த எஸ்?...