எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்து 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகல் மேலும் ஆயிரத்து 280 ரூபாய் குறைந்தது. இதன்மூலம் ஒரேநாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்து 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 460 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 540 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் காலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகல் மேலும் 5 ரூபாய் குறைந்தது. அந்த வகையில் ஒரேநாளில் வெள்ளி கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ 7 ஆயிரம் ரூபாய் சரிந்து வெள்ளி 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டுவந்த தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 380 ரூபாய் குறைந்ததால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.