குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானை - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் தாளியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டியுள்ள தாளியூர் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை, காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தாளியூர் பகுதியில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஊருக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Night
Day