கனமழையால் மண் சரிவு - மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுபாளையம் இடையிலான மலை ரயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

ராட்சத பாறைகள் விழுந்து ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. சேதம் அடைந்த தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டு கொண்டே இருப்பதால் 4வது நாளாக இன்றும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலை ரயில் பாதையில் விழுந்துள்ள ராட்சத பாறைகளை ரயில்வே துறையினர் வெடி வைத்து உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day