சிதம்பரத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெய்து வரும் கனமழையால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பெருங்காலூர், முகையூர், பரிவளாகம், சிறுகாலூர், ராதாநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால் மழை நீர் வடிய வழியில்லாமல் வயல்களிலேயே தேங்கி நிற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Night
Day