டிரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதம் - மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள உலகளாவிய வரி விதிப்புகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது என அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

உலக நாடுகள் மீதான டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள வரி வதிப்புகள் அதிகார மீறலாகும் என கூறி அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது. 

வழக்கை விசாரித்த வாஷிங்டனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் அனைத்துக்கும் வரி விதிப்பதற்கு, அதிபர் டிரம்புக்கு எல்லையற்ற அதிகாரம் கிடையாது என்று கூறி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை இன்று உறுதி செய்தது. டிரம்ப் வரி விதிப்புகள் சட்டவிரோதமானவை,  சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி இருக்கிறார் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிமன்றம், அரசு நிர்வாகம் அப்பீல் செய்வதற்காக, அக்டோபர் 15ம் தேதி வரை  கால அவகாசம் அளித்துள்ளது. கொடுத்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது, தவறானது என்று கூறியுள்ளார். வரிகள் நீக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு பேரழிவாக இருக்கும் என்று கூறிய அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து போராட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Night
Day