இந்தோனேசிய வீராங்கனையிடம் தோற்றார் பி.வி. சிந்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டியில் பி வி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் புத்ரி வார்டானியை எதிர்த்து ஆடினார். இதில் முதல் செட்டில் இந்தோனேசிய வீராங்கனையும், 2வது செட்டில் பி வி சிந்துவும் வெற்றி பெற்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கைப்பற்றிய இந்தோனேசிய வீராங்கனை 21க்கு 14, 13க்கு 21, 21க்கு 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலேசிய ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

Night
Day