சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு, 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா புறப்பட்டார்.

ஜப்பான் மற்றும் சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனையடுத்து ஜப்பானில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு சீனாவின் தியான் ஜின் நகருக்கு விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டார். அங்கு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன பயணத்தை பிரதமர் மேற்கொள்கிறார். கடந்த 2018ம் ஆண்டு ஜூனில் சீனாவின் குயிங்தவோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பின்னர் 2019ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவுக்கு செல்வதை பிரதமர் மோடி முழுமையாக புறக்கணித்தார். 

இந்த சூழலில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சீனா புறப்பட்டுச் சென்றார்.

Night
Day